உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

கோவையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா சைபர் டிரக்! வைரலாகும் விடியோ!!

கோவை சாலைகளில் எலான் மஸ்க்கின் டெஸ்லா சைபர் டிரக் வலம் வரும் விடியோ வைரலாகி வருகிறது.

News image

டெஸ்லா சைபர் டிரக் - DPS

Updated On :9 பிப்ரவரி 2026, 1:27 pm IST

கோவை: எலான் மஸ்க்கின் கனவு வாகனம் என்று சொல்லப்படும் டெஸ்லா நிறுவனத்தின் சொகுசு சைபர் டிரக் கோவையில் வலம் வரும் விடியோ வைரலாகியிருக்கிறது.

துருப்பிடிக்காத இரும்பு ராட்சதன் என்று அறியப்படும் ரூ.5 கோடி மதிப்பிலான எலான் மஸ்க்கின் கனவு வாகனம் கோவை சாலைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், எப்போதும் சொகுசு கார்களின் புகலிடமாக இருந்து வருகிறது. ஆனால், இன்று கோவை மாநகர சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், அந்தப் பாதையில் சென்ற அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது.

உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான 'சைபர் டிரக்' (Tesla Cybertruck), கோவையின் முக்கிய சாலைகளில் முதன் முறையாக வலம் வந்த போது, மக்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர்.

விண்வெளி ஓடம் போன்ற அதன் வித்தியாசமான வடிவமும், துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் (Stainless Steel Exoskeleton) ஆன உடலமைப்பும், ஏதோ ஹாலிவுட் படக் கருவி ஒன்று சாலைக்கு வந்து விட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கியது.

இந்தியாவில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் தென்பட்ட இந்த 'எலக்ட்ரிக் பீஸ்ட்', இப்போது கோவை மக்களின் கண்களுக்கும் விருந்தளிக்கத் தொடங்கியுள்ளது.

சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வாகனம், துப்பாக்கித் தோட்டாக்களையே தாங்கும் வல்லமை கொண்டது என்பது கூடுதல் அம்சம்.

கோவையின் அவினாசி சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இந்த வாகனம் தென்பட்ட போது, கார் பிரியர்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

ஒருபுறம் இதன் விலை மற்றும் இறக்குமதி வரி குறித்து விவாதங்கள் எழுந்தாலும், மறுபுறம் இதன் மாஸ் லுக் அனைவரையும் வியக்க வைத்து உள்ளது.

இந்தியாவில் மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த சைபர் டிரக், கோயம்புத்தூர் போன்ற ஒரு தொழில் நகரத்தின் சாலைகளில் வலம் வருவது, நகரின் பொருளாதார நிலையை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் காட்டுவதாக இளைஞர்கள் உற்சாகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Summary

A video of Elon Musk's Tesla Cybertruck cruising the roads of Coimbatore is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.