தேமுதிக உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தேமுதிகவுடன் அதிமுக நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தற்போது தில்லியில் உள்ள பாஜக தலைமை, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
மேலும் தேமுதிக மத்திய பாஜக ஆட்சியில் பங்கு கேட்பதால் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக விளக்கம் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,
"தேமுதிக உடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அப்படி நடக்கும்போது நான் உங்களுக்கு சொல்கிறேன்.
அனைத்துத் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. அது அவருடைய கருத்து.
குடியரசு நாளன்று தேநீர் விருந்தில், என்னுடைய நீண்டகால நண்பர் என்ற முறையில் சுதீஷை சந்தித்து பேசிக் கொண்டிருத்தேனே தவிர கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை.
தேமுதிகவுடன் கூட்டணியா? என்பது பற்றி இப்போது கருத்து சொல்ல முடியாது. மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி வருவார்கள். அப்போது பார்க்கலாம்" என்று கூறினார்.
பிரதமர் நிகழ்வில் மேடையில் தேமுதிகவை பார்க்கலாமா? என்ற கேள்விக்கு 'பார்க்கலாம்' என்று கூறினார் நயினார் நாகேந்திரன்.
Summary
Alliance talks with DMDK? BJP leader Nainar Nagendran's response
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே நல்ல தலைமைக்கு அழகு: நயினார் நாகேந்திரன்
நிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!

பாஜகவின் எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் பின்னடைவு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



