மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திமுக தலைமையிலான வலுவான கூட்டணி: செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் மீண்டும் திமுக தலைமையிலான அரசே அமையும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

News image
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.- கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2026, 5:50 am

இணையதளச் செய்திப் பிரிவு

திமுகவுடன் வலுவான கூட்டணியில் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசுகையில், "இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்ந்து வலுவாக உள்ளது.

திமுக மீண்டும் தொடர்ந்து வெற்றி பெறும். இந்த திமுக அரசே தொடரும் என்று மக்கள் ஏற்கெனவே சான்றிதழ் வழங்கிவிட்டனர். நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பிப். 22 ஆம் தேதியில் திட்டமிடப்பட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து விடும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 70 நாள்களுக்கும் மேலாக காங்கிரஸ் காத்துக்கொண்டிருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்காததால், தொண்டர்களிடையே வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார்.

இதனையடுத்து, "கட்சித் தலைவரால் தொகுதிப் பங்கீடு குழு விரைவில் அமைக்கப்பட்டு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்ததும், பிப். 22 ஆம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று திமுக அறிவித்தது.

summary

DMK will win again and achieve consecutive victories, says Tamil Nadu Congress president K. Selvaperunthagai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.