விஜய் ஆட்சிக்கு வந்தபிறகு நடந்தவற்றை மக்களிடம் தெரிவிப்பார்: செங்கோட்டையன்
விஜய் தேர்தலில் வென்று, ஆட்சிக் கட்டிலில் அமருவார். அப்போது நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எடுத்துச் சொல்வார் என்று தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “வருகை தரும் மக்கள், குழந்தைகளை எடுத்துக் கொண்டும், வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கருவுற்ற பெண்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தவிர்த்து, காவல்துறை வேண்டுகோளை ஏற்று, தொலைக்காட்சி மூலமாக நேரலையில் கண்டுகளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வேண்டுகோளை ஏற்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு வரும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கும், திமுகவை வீழ்த்துவதற்கு விஜய் ஒருவரால் மட்டும்தான் முடியும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சேலம் நிகழ்ச்சி வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக அமையும்” என்றார்.
சென்னையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், ”பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். யார், யாரை தாக்கினார்கள் என்று தெரியும். யார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்று நன்றாக தெரியும்.
உண்மையிலேயே யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்; எடுத்துச் சொல்ல வேண்டும்; அவர் சொல்லும்போதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும்.
தேர்தலில் வென்று விஜய் ஆட்சிக் கட்டிலில் அமருவார். அப்போது நாட்டு மக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எடுத்துச் சொல்வார்.
விஜய் எப்படி, எவ்வாறு வரப்போகிறார் என்பது குறித்து தகவல் நாளை தெரிவிக்கப்படும்” என்றார்.
Interview with tvk State Executive Committee Chief Coordinator Sengottaiyan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

