மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (பிப். 13) கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
அதேபோல வரும் 16- ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமைவெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மகாசிவராத்திரியை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்- 06135) புறப்பட்டு சனிக்கிழமை (பிப். 14) பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.
மறுமாா்க்கத்தில் வரும் 16- ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 9.35 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) காலை 10.15 மணிக்கு சென்னை வந்தடையும்.
கொல்லத்துக்கு சிறப்பு ரயில்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை (பிப். 13) இரவு 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு அதிவேக விரைவு ரயில் (எண் -06113) சனிக்கிழமை (பிப். 14) மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதேபோல, வரும் 16 -ஆம் தேதி கொல்லத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு அதிவேக ரயில் இயக்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்

17.3.1976: ரயில் பயணிகளுக்காக சென்ட்ரல், எழும்பூரிலிருந்து தனி பஸ்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


