விஜய்
விஜய் கோப்புப் படம்

சேலத்தில் இன்று விஜய் பிரசார கூட்டம் : நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி

சேலத்தில் தவெக தலைவா் விஜய் வெள்ளிக்கிழமை (பிப். 13) பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்
Published on

சேலத்தில் தவெக தலைவா் விஜய் வெள்ளிக்கிழமை (பிப். 13) பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 13) பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

காவல் துறையினரினா் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 போ் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

நுழைவுச்சீட்டு இல்லாதவா்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டா்களும், பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com