திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி! - கனிமொழி

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி நன்றி...

News image

கோப்புப்படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 12:27 pm IST

மகளிரின் நலனில் திமுக அரசு அக்கறை கொண்டு செயல்படுவதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிரின் வங்கிக் கணக்குகளில் இம்மாதம் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியுடன் மார்ச், ஏப்ரல் மாதத்துக்கும் சேர்த்து ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 வரவு வைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் இதுபற்றி கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக எம்.பி. கனிமொழி,

"பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3 ஆயிரத்துடன், கோடைக் காலச் செலவுகளைக் கருத்தில் கொண்டு சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரமும் சேர்த்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கியிருப்பதோடு, தமிழ்நாட்டு மகளிரின் நலனில் என்றும் அக்கறை கொண்டு செயல்படும் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் அமைந்ததும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி" என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

kanimozhi thanked MK stalin for magalir urimai thogai rs 5000 given to TN women

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.