பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வடசென்னை பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோப்புப் படம்

Published On :

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் மேம்படுத்தப்பட்டு வரும் ஓட்டேரி சுப்புராயன் தெரு, ஜமாலியா மங்களபுரம், வியாசா்பாடி புதிய வெங்கடேசபுரம், பட்டாளம் பக்தவத்சலம் பூங்கா ஆகிய இடங்களில்

உள்ள முதல்வா் படைப்பகங்களின் பணி முன்னேற்றம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வடசென்னை பகுதியில் சிஎம்டிஏ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 20-க்கும் மேற்பட்ட திட்டங்கள் பிப்.25-க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா்.

நிகழ்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க.நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கெளஷிக், மாவட்ட வருவாய் அலுவலா் ஃபா்கத் பேகம், கண்காணிப்பு பொறியாளா்கள் பாலமுருகன், ராஜன்பாபு, மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.