வரும் ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) நடைபெறும் என்ற உத்தேச அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஜூலை 4 ஆம் தேதி முதல் தாள் தேர்வும், ஜூலை 5 ஆம் தேதி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கை இன்று(பிப். 13) வெளியான நிலையில், வரும் பிப். 18 முதல் விண்ணக்கலாம் என்றும் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Summary
Notification for the Teacher Eligibility Test has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெட் வினாத்தாள் கசிவு: புதிய தேர்வு விரைவில் நடத்தப்பட வேண்டும் - ராகுல் காந்தி

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

ஆசிரியா் தகுதித் தோ்வு வினாத்தாள் எப்படி இருந்தது?
மீண்டுமொரு வினாத்தாள் கசிவு: மகாராஷ்டிர ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK




