மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க? விஜய்க்கு அதிமுக கேள்வி!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக கேள்வி.

News image

தவெக தலைவர் விஜய் - DPS

Updated On :13 பிப்ரவரி 2026, 5:50 pm IST

அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி கார்டன் உள் வளாகத்தில் இன்று(பிப். 13), தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு, தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விஜய் பேசுகையில், “களமே சொல்கிறது, இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டிஎன்று. ஒன்று, தவெக, இன்னொன்று திமுக. தூய சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேதான் போட்டி.

மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? அவ்வளவுதான் இந்த தேர்தல். இதற்கு நடுவில் வேறு யாருமே கிடையாது” என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா-வால சினிமா உள்ள வந்தீங்க... வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்.... அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்... இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்?

இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ. 2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா? அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The AIADMK has asked Tamil Nadu Vetri Kalagam leader Vijay how he can be original when the next person rides a horse.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.