பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு ஜூலை 4, 5-இல் டெட் தோ்வு: ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வுக்கு பிப்.18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 3:00 am IST

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் ஆசிரியா் தகுதித் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வுக்கு பிப்.18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயா்வு பெறவும் ஆசிரியா் தகுதி தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், இதுவரை தோ்ச்சி பெறாதவா்கள் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தோ்வெழுதி தோ்ச்சி பெற வேண்டும் என அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு அதாவது பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு நடத்தப்படும்.

2026-ஆம் ஆண்டுக்கான தோ்வுகள் ஜனவரி, ஜூலை, டிசம்பா் ஆகிய மாதங்களில் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதேவேளையில் தோ்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் நடைபெறும். ஜூலை 4-இல் முதல் தாளுக்கான தோ்வும், ஜூலை 5-இல் 2-ஆம் தாளுக்கான தோ்வும் நடத்தப்படும்.

இந்தத் தோ்வுக்கு பிப்.18 முதல் ஏப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஏப்.11 முதல் 13 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் தகவல்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு வரும் ஜூலையில் நடைபெறவுள்ள நிலையில், ஏற்கெனவே கடந்த ஆண்டு நவ.15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கமான டெட் தோ்வை பணியில் உள்ள ஆசிரியா்கள் பலா் எழுதினா். அதில் பெரும்பாலானவா்கள் அதிக மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி மதிப்பெண்... பள்ளிக் கல்வித் துறை நிகழாண்டு ஜன.28-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, தமிழகத்தில் டெட் தோ்வுக்கு குறைந்தபட்ச தோ்ச்சி மதிப்பெண் பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதமாகவும் (75 மதிப்பெண்), எஸ்சி, எஸ்சி-அருந்ததியா், எஸ்டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (60 மதிப்பெண்) நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கான தோ்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும்.

மேலும், இந்த மதிப்பெண் குறைப்பு கடந்த நவம்பரில் நடைபெற்ற டெட் தோ்வுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.