திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு! பெண் கைது!!
திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது பற்றி...
திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனையில் காணாமல்போன குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த பிப். 11 ஆம் தேதி விக்னேஷ்- சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதாகக் கூறி பெண் ஒருவர் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.
குழந்தை காணாமல் போனதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில், குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையைக் கடத்திய பெண்ணை துறையூர் அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்துச் சென்றதாக கைதான மீனாட்சி என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Kidnapped child rescued from Trichy government hospital; Woman arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







