மகா சிவராத்திரியையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடிக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (பிப்.15,16) தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
மகா சிவராத்திரியையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, வேலூர் , காட்பாடிக்கு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 15, 16 தேதிகளில் இயக்கப்படவுள்ளன.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிப்ரவரி 15,16 தேதிகளில் காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டிஎண் 06130), அதே நாளில் முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து அதே நாள்களில் பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வேலூருக்கு சிறப்பு ரயில்: விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப்.14,15) இரவு 10.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் --வேலூர் கண்டோன்மென்ட் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06167), மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (பிப்.15,16) அதிகாலை 2.05 மணிக்குப் புறப்படும் வேலூர் கண்டோன்மென்ட் - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06168), அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள்வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, போளூர், ஆரணி சாலை, சேதராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
காட்பாடி சிறப்பு ரயில்: விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (பிப்.15,16) காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் (வண்டி எண் 06049), அதேநாள்களில் பிற்பகல் 1.05 மணிக்கு காட்பாடி ரயில் நிலையம் சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் அதே நாள்களில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் காட்பாடி -விழுப்புரம் முன்பதிவில்லா பயணிகள் ரயில் (வண்டி எண் 06050), விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கு வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், அகரம்சிப்பந்தி, போளூர், மதிமங்கலம், ஆரணிசாலை, சேதராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், கனியம்பாடி, பெண்ணாத்தூர் ஹால்ட், வேலூர் கண்டோன்மென்ட், வேலூர் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Summary
On the occasion of Maha Shivaratri, Southern Railway is operating special trains from Villupuram to Tiruvannamalai, Vellore and Katpadi on Sunday and Monday (February 15 and 16).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




