திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மக்களுக்கு சர்ப்ரைஸ்... மக்கள் விரோதிகளுக்கு ஷாக்: முதல்வர் ஸ்டாலின்

திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

News image
Updated On :14 பிப்ரவரி 2026, 6:42 pm IST

மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம் என்று திருப்பத்தூர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

47 தொகுதிகளுக்கான திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு ஜோலார்பேட்டை மண்டலவாடியில் இன்று(பிப். 14) நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல்!

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது பல ஆண்டுகளுக்கு ஆய்வாளர்கள் வியந்து பேசக்கூடிய வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன் வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? தில்லி அணியா? என்பதை, இந்தத் தேர்தல் முடிவு செய்யப்போகிறது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காகவும்தான்.

1000 ஆண்டுகள் நின்று பேசும் சாதனைகளை 5 ஆண்டில் செய்து முடித்துள்ளோம்.

தமிழ்நாட்டின் நிரந்தர ட்ரெண்ட் கருப்பு சிவப்புதான். 2026 தேர்தலிலும் நாமதான், 7 ஆவது முறையாக ஆட்சியில் அமரப் போகிறோம்.

தமிழ்நாட்டு மக்களிடையே பேச துணிவின்றி எனக்கு சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான அடையாளமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியின் அவதூறை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

கடுமையாக உழைத்தால் 100% வெற்றிக் கிடைக்கும். மகளிர் உரிமைத்தொகையை தடுத்து நிறுத்தயிருந்த சதியை நாம் முறியடித்துள்ளோம்” என்றார்.

Summary

Chief Minister M.K. Stalin said at the Tirupattur conference that we have given a surprise to the people and a shock to the enemies of the people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.