ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 64 வது ஆண்டாக முத்தம்மாள்(93) என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கைகளால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டி தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி அன்று கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் செய்து சுவாமிக்கு படைக்கும் விஷேச நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 12 மணிக்கு ஊரணிபட்டியைச் சேர்ந்த முத்தம்மாள்(93) என்ற மூதாட்டி தொடர்ந்து 64 வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டார்.
நெய்யால் பக்தர்களுக்கு நெற்றியில் திலகமிட்டு மூதாட்டி ஆசி வழங்கினார். மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதமிருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் செய்தார். அந்த அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Summary
For the 64th consecutive year, on the occasion of Maha Shivaratri at the Srivilliputhur Pathirakaliamman Temple, an elderly woman named Muthammal (93) baked appam with her hands in boiling ghee and offered it to devotees as prasad.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

100-ஆவது பிறந்த நாளை கொண்டாடிய படுகா் இன மூதாட்டி!
கோதுமை மாவு அப்பம்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



