வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:
”கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 1,71,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 29,000 வீடுகளின் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஊரக வளா்ச்சி முகமை மூலமாக 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது.
Summary
Finance Minister Thangam Thennarasu has said that 8 lakh dream homes will be built for artists by 2030.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 லட்சம் கனவு இல்லம் கட்டுவதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு 2030 - கனவு மெய்ப்படும் - புகைப்படங்கள்

கலைஞா் கனவு இல்லம் திட்டம்! திருச்சி மாவட்டத்துக்கு கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு!
விடியல் பேருந்துகளில் 881 கோடி முறை பெண்கள் பயணம்!
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


