1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள்!

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் குறித்து....
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Updated on
1 min read

6 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ. 1,237 லட்சம் கோடி உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகள் குறித்து பேரவையில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எனும் இலக்குடன் இயங்கும் தமிழ்நாடு அரசு, உலக முதலீட்டாளர் மாநாடு TN-Rising போன்ற முன்னெடுப்புகள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை மிகப்பெரும் அளவில் ஈர்த்து வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இதுவரை, 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ. 1,237 லட்சம் கோடி உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சி சமச்சீராகப் பரவும் வகையில் மாவட்டந்தோறும் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 32,525 ஏக்கர் பரப்பளவில் 24 சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்ற பின், மேலும் 12 புதிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 49,468 ஏக்கர் பரப்பளவில் 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், கூடுதலாக 28,392 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' மற்றும் சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய நகரம்' ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பெரும்புதூரில் ரூ. 706 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இத்தகைய முன்னோடி நடவடிக்கைகளின் காரணமாக, தொழில் வளம் பெருகி, 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 11.19 சதவீதம் எனும் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டி, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.

மேலும், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23 சதவீதம் பங்களிப்புடன் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Summary

Finance Minister Thangam Thennarasu has said that 1,179 MoUs have been signed for investments worth Rs 1,237 lakh crore, creating over 6 lakh jobs.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற ரூ. 229 கோடி ஒப்புதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com