விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற ரூ. 229 கோடி ஒப்புதல்!

மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்ற ரூ. 229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

Updated On :17 பிப்ரவரி 2026, 6:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மத்திய சிறையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ.229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.

பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:

”கோவை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்ற ரூ. 327 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மத்திய சிறையை புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க ரூ. 229 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 2,15,39,333 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை மூலம் ரூ.69,087 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.214 கோடியில் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Summary

Rs. 229 crore has been approved for the relocation of the Madurai Central Jail to another location.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.