வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கோவை - கேரள எல்லைகளில் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மதுபானம், பணம் மற்றும் கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் எல்லைப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம், தேர்தல் சமயத்தில் அண்டை மாநிலங்களுக்கிடையேயான பாதுகாப்புப் பணிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
Summary
An important consultative meeting was held today at the Coimbatore District Collectorate regarding security for the upcoming Assembly elections and preventive measures to be taken in border areas.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை!

தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!
தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!

குருசுமலையில் மின் இணைப்பு வழங்க கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


