தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஆழ்கடல் பகுதிக்கே திரும்பச்செல்லும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நிலை குறித்து...

News image

கோப்புப்படம் - படம்: DNS

Updated On :19 பிப்ரவரி 2026, 10:14 am

வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை-தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து, பின்பு ஆழ்கடல் பகுதிக்கே திரும்பச்செல்லும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தெற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடித்து வருகிறது. இந்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்திற்கு இலங்கை-தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து பின்பு ஆழ்கடல் பகுதிக்கே திரும்பச்செல்லும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (பிப். 20) இரவு வரை வறண்ட வானிலையுடன் பகலில் வெய்யிலும், இரவில் பனிப்பொழிவு/குளிர் தொடரும்.

தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் பிப். 21,22 மற்றும் 23 ஆகிய மூன்று நாள்கள் தமிழகத்தில் மழை வானிலை நிலவக்கூடும்.

மழையின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அறுவடை பணிகளுக்கு இடையூறு அளிக்கும் மழையாக அமையும்.

சம்பா, தாளடி அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் பிப். 20 வரை அச்சமின்றி அறுவடைப் பணிகளை மேற்கொள்ளலாம், அறுவடை செய்த தானியங்களை மழைச்சாரல் படாதவாறு பத்திரப்படுத்துவது அவசியம்.

முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு காரணம்கருதி பிப். 21,22 மற்றும் 23 ஆகிய மூன்று நாள்கள் மட்டும் அறுவடைப் பணிகளை ஒத்திவைப்பது நல்லது.

அறுவடையின்போது லேசான மழை பெய்தாலே தானியங்கள் வீணாகிவிடும் என்பதால்தான், 3 நாள்கள் ஒத்திவைக்க பரிந்துரைக்கிறேன். நெல் அறுவடை மட்டுமல்லாது உள் மாவட்டங்களில் வெங்காயம், சோளம், பருத்தி போன்ற அறுவடைப் பணிகளை சற்று ஒத்திவைப்பது சிறந்தது.

கனமழைக்கோ, அறுவடைப் பணிகளை தொடர்ந்து பாதிக்கும் அளவிற்கோ பெரும் மழையாக அமையாது.

பிப். 24 ஆம் தேதி முதல் வெய்யிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து அறுவடை பணிகளுக்கு ஏற்ற சூழல் உருவாகும்.

தமிழக விவசாயிகள் பயம், பதற்றமின்றி அறுவடைப் பணிகளை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மீனவர்கள் பிப் 21,22 ஆகிய இரண்டு நாள்கள் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லாமல் இருப்பது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Delta Weatherman Hemachandran has advised farmers to take precautions due to the low pressure area prevailing in the south-central Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.