தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திமுக கூட்டணி பலப்படுத்தப்பட்டுள்ளது; கலகலத்துப் போனது அதிமுக: வைகோ

திமுக கூட்டணி பலப்படுத்தப்பட்டுள்ளது; கலகலத்துப் போனது அதிமுக என்று வைகோ கருத்து.

News image

வைகோ - படம் - மதிமுக

Updated On :19 பிப்ரவரி 2026, 6:39 am

மதுரை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது தித்திக்கும் செய்தி என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ மதுரையில் இன்று கூறினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருக்கும் நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது இனிப்பான செய்தி என்றார்.

மேலும், வரும் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்கும் என்பது என் கணிப்பு. மதிமுக இந்த முறை தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும்.

தேமுதிகவும் கூட்டணியில் இணைந்திருப்பத தித்தப்பான செய்தி. இதனை நாங்கள் வரவேற்கிறோம். தேமுதிக இணைந்திருப்பது திமுக கூட்டணியை பலப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி கலகலத்துப் போனது என்றும் தெரிவித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். அதுவே தேர்தல் முடிவாக அமையும் என்பது எனது கருத்து. கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. திமுக தனது பெரும்பான்மையோடு அமைக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிகள் அந்த அரசுக்கு பக்கபலமாக அரசியல் செய்யும்,இதே நிலைமை தொடரும் என்பதுதான் என்னுடைய கணிப்பு.

தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவாக ஏற்கனவே இருந்த திமுக இதனால் இன்னும் பல பெரும். தேர்தல் வெற்றி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என கூறி வந்தேன் இப்போது எங்கள் கூட்டணி மேலும் மேலும் பலம் பெற்றுள்ளது.இது எனக்கு தித்திக்கும் வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

Summary

DMK alliance has been strengthened; AIADMK has been left in disarray, says Vaiko.

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.