சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது.
கட்சித் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை திமுக கூட்டணியில் இணையாத தேமுதிக முதல் முறையாக இணைந்திருப்பது, திமுக கூட்டணிக்கு பலம் சேர்த்திருப்பதாகவே கூறப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி செய்யப்பட்டது. மு.க. ஸ்டாலினுக்கு சுதீஷ் பொன்னாடை போர்த்தினார். கூட்டணியில் இணைந்த தேமுதிகவை வரவேற்கும் வகையில், பிரேமலதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்பைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து கச்சிதமாகப் பேசி தேமுதிகவை, திமுக பக்கம் கொண்டு வந்திருக்கிறார் எ.வ. வேலு என்றும் பேசப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வரும் தேமுதிக, தற்போது 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறது. இது இரு கட்சிகளுக்குமே சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
ஏற்கனவே, தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஒரு பக்கம் அதிமுக, மறுபக்கம் திமுக என இரண்டு பக்கத்திலும் பேசி வருவதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில்தான், அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக இன்று திமுகவில் இணைந்திருக்கிறது. தேமுதிகவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பாஜகவின் எண்ணம் நிறைவேறாமல் போயிருக்கிறது.
Summary
In a sudden twist, DMDK joined the DMK alliance for the first time.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மு.க. ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!

10-ல் ஒரு இடத்தில் மட்டுமே தேமுதிக முன்னிலை!

தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை?

பாலில் விழுந்த பழத்துக்கு 10 தொகுதிகள் கிடைத்தது எப்படி?
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


