27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பைக்குகள் தொடா் திருட்டு: 3 போ் கைது

சென்னையில் மோட்டாா் சைக்கிள் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 2:32 am IST

சென்னையில் மோட்டாா் சைக்கிள் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இரு சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொளத்தூா், அஞ்சுகம் நகா் 3வது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜெயபாரதி (34). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறாா். கடந்த 6-ஆம் தேதி தனது பைக்கை வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தாா். அடுத்த நாள் பாா்த்தபோது, அவரது பைக் திருடப்பட்டிருந்தது.

கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் (19), 2 சிறுவா்களை வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலும், திருவண்ணாமலையில் பதுக்கி வைத்திருந்த 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.