பாமக சின்னம்: ராமதாஸ் வழக்கு தள்ளுபடி; நீதிமன்றம் எச்சரிக்கை!

பாமக சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாமக நிறுவனர் ராமதாஸ்.கோப்புப்படம்
Updated on
1 min read

மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரிய பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பாமக தலைவராக ராமதாஸை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும், பாமகவின் தேர்தல் சின்னமான மாம்பழம் சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற இரு வழக்குகளின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

பாமக தலைவராக தோ்தல் ஆணையம் தன்னை அங்கீகரித்து பதிவு செய்யும்வரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என உத்தரவிடக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் இரு புதிய மனுக்களை ராமதாஸ் தாக்கல் செய்தார். அதில், பாமக தலைவராக நான்தான் (ராமதாஸ்) உள்ளேன். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, தில்லி உயர் நீதிமன்றத்தில் உள்கட்சித் தேர்தலை நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பிவைத்தால், அதைப் பதிவு செய்து அங்கீகரிப்பதாக தோ்தல் ஆணையம் கூறியது. அதன்படி தேர்தல் ஆணையத்துக்கு நான் கடிதம் அனுப்பினேன்.

அந்த கடிதத்தை தேர்தல் ஆணையம் இதுவரை பரிசீலிக்கவில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு எந்தநேரமும் வெளியாகலாம் என்ற நிலை உள்ளது. எனவே, பாமக தலைவராக தேர்தல் ஆணையம் என்னை அங்கீகரித்து பதிவு செய்யும்வரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்

மற்றொரு மனுவில், பாமகவின் தேர்தல் சின்னம் மாம்பழம். இதை கட்சிக்கு தொடர்பே இல்லாத சிலர் பயன்படுத்துகின்றனர். எனவே, மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக உள்ள பாமகவுக்கு மட்டும் சொந்தம். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது எனக் கூறினார்.

இந்த இரு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(பிப். 20) விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, பாமக உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும் மாம்பழம் சின்னம் முடக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

இதனைத் தொடர்ந்து, பாமக உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக் கொள்ளலாம். உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டு, இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.

மேலும், இது போன்ற வழக்குகளைத் தொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம், இனி தொடுத்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இது, ராமதாஸ் தரப்பு பாமகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Summary

The Madras High Court has dismissed the petition of PMK founder Ramadoss seeking to ban the mango symbol.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com