முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மான் கீ பாத்) என்ற தலைப்பில் மாதந்தோறும் கடைசி வாரம் ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் வானொலியில் வாயிலாக உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று (பிப். 22) 131-வது எபிசோடில் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் மகத்தான தலைவர் என புகழாரம் சூட்டிப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர். அவருடனான நட்பு பசுமரத்தாணி போல எனது நெஞ்சில் இடம்பெற்றிருக்கிறது.
ஜெயலலிதா ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் இருக்கும், பெண்கள் சக்தியின் வெளிப்பாடாகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கடும் நடவடிக்கைகளை எடுத்தார் ஜெயலலிதா.
Sharing this monthâs #MannKiBaat. Do listen! https://t.co/XbKxZCLo9s
— Narendra Modi (@narendramodi) February 22, 2026
பிப். 24 ஆம் தேதி அவரது பிறந்தநாள் விழா. இன்றும் கூட, நான் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போது, தமிழக மக்கள் ஜெயலலிதா மீது வைத்திருக்கும் பற்றை நான் உணர்ந்திருக்கிறேன். ஜெயலலிதாவைப் பற்றி பேசும்போது மக்களிடம் ஒரு புத்துணர்வைப் பார்க்க முடிகிறது.
குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபோதெல்லாம் எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஜெயலலிதா. நான் முதல்வராக இருந்தபோது குஜராத்துக்கு பல உதவிகளை செய்தார். அவர் நாட்டின் மீதும் பெரிய பற்றுக் கொண்டிருந்தார்” என்றார்.
தமிழ்நாடில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக அரசியல் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவைப் புகழ்ந்து பிரதமர் மோடி, மனதில் குரல் நிகழ்ச்சியில் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Summary
During the 131st episode of Mann Ki Baat, PM Modi says, "In our country, those who have worked for the welfare of society… those who have prioritised the public in their noble deeds always remain in the hearts of the people. Amma Jayalalithaa ji was one such popular leader. February 24th is the occasion of her birth anniversary."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுக்கோட்டையில் மாமன்ற சாதாரண கூட்டம்: காலிக் குடத்துடன் உறுப்பினா் பங்கேற்றதால் பரபரப்பு

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




