இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கூட்டணிக் கட்சி விவரங்கள் குறித்து...

TN Election 2026 DMK alliance On which dates will seat sharing talks take place Full details

அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்

Published On :

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மனிதநேய மக்கள் கட்சியுடன் நாளை (பிப். 23) திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிப். 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஐ) பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் இன்று (பிப். 22) முதல் திமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் முதல் வாய்ப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இன்று, திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை (பிப். 23) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், மனித நேய மக்கள் கட்சியுடனும் திமுக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக அக்கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப். 26 ஆம் தேதி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஎம்) திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல்ராஜ், கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து பிப். 27 ஆம் தேதி தொகுதிப் பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. திமுக கூட்டணியில் கூடுதலான இடங்களைக் கேட்டுப் பெறுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் முன்னதாக தெரிவித்திருந்தார்.

கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கே.என். நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இம்முறை பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிகவும் இணைந்துள்ளதால், கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் திமுக கண்டிப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

DMK will hold talks with alliance in connection with the assembly elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.