மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு ஏற்பட்டிருப்பது பற்றி...

News image
நல்லகண்ணு- EPS
Updated On :24 பிப்ரவரி 2026, 4:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

முதுபெரும் அரசியல் தலைவா் நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (பிப். 24) தெரிவித்துள்ளார்.

வயோதிகம் மற்றும் கீழே விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணுவின் உடல்நிலையில் கடந்த சில நாள்களாக பின்னடைவு ஏற்பட்டது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

அவரின் உடல்நிலை கடந்த இரண்டு நாள்களாக பின்னடைவை சந்தித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.

இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மு. வீரபாண்டியன், நல்லகண்ணு உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

”மருத்துவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகின்றது. மருத்துவர்கள் அருகிலிருந்து ஒவ்வொரு நொடியும் கவனித்து வருகிறார்கள்.

மருத்துவர்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இயற்கை அவரிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.