கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு...
Panneerselvam
ஓபிஎஸ்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தன்னை கட்டாயப்படுத்தி முதல்வராக்கியதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தேனியில் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காக கட்சி நடத்தினார்கள். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை 1991ல் ஒன்றிணைத்தவர் ஜெயலலிதா. தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி என 62 வகையான உதவிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தவர்.

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சோதனைகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறி வந்தேன்.

கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தார் ஜெயலலிதா. 2 முறை அவரின் கட்டளையை ஏற்று நான் முதல்வரானேன். ஜெயலலிதா எனக்கு பல்வேறு சூழ்நிலைகளில் நற்சான்று கொடுத்தார்.

ஜெயலலிதா மறைந்தபிறகு என்னை காட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள். அவர் மறைந்தபிறகு எனக்கு முதல்வராவதில் விருப்பம் இல்லை என்று கூறினேன். எனினும் கட்டாயத்தின்பேரில் 3 ஆவது முறையாக நான் முதல்வரானேன். நான் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை.

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அதிமுகவின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தைத் தொடங்கினேன்.

அரசியல் பிரபலம் ஒருவரின் அறிவுறுத்தலின்பேரில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டேன்" என்று கூறினார்.

Summary

Former CM O. Panneerselvam has said that he was forced to become the Chief Minister after the death of former Chief Minister Jayalalithaa.

Panneerselvam
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com