உள்ளாட்சிகளில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் திமுகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த திங்கள்கிழமை சென்னைக்கு வருகை தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.
அப்போது திமுகவிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து அவர் பேசியதாவது:
”காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளார் கே.சி. வேணுகோபாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட்டணி குறித்து விவாதித்தனர். தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடரும்.
உள்ளாட்சி தேர்தல்களில் அதிகாரப் பகிர்வு குறித்து இருவரும் விவாதித்தனர். உள்ளாட்சியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் திமுகவுக்கு கொள்கை ரீதியில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், மாநில அளவில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கலாசாரம் தமிழ்நாட்டில் இல்லை என்று முதல்வர் கூறியுள்ளார்” என்றார்.
Summary
DMK has no problem with local government power sharing! Congress executive
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல் காந்தி வருவார்! - கிரிஷ் சோடங்கர்
தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்! கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி!!

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: முகுல் வாஸ்னிக், கிரிஷ் சோடங்கர் பங்கேற்பு

எந்த கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


