மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படவுள்ளது தொடர்பாக...
நல்லகண்ணு
நல்லகண்ணுகோப்புப் படம்
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு உடல் சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூ. அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு(101) இன்று (பிப். 25) காலமானார்.

வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.

வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்தது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்தும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் இன்று பிற்பகல் 1.55 மணிக்கு நல்லகண்ணு காலமானதாக மருத்துவமனை அறிவித்தது.

நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக, தானமாக வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி அஞ்சலிக்காக, மறைந்த நல்லகண்ணுவின் உடல் மருத்துவமனையில் இருந்து, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூ. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

கட்சியினர், பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீஸார் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்துள்ள நிலையில், மாநகரக் காவல் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மறைந்த நல்லகண்ணுவின் உடல் இன்று மாலை 4 மணிக்கு மருத்துவமனையில் இருந்து இந்திய கம்யூ. கட்சியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இன்று மாலை 5 மணி முதல் நாளை (பிப்.26) மாலை 3 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரிக்கு நல்லகண்னுவின் உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.

Summary

Nallakannu's body is being kept at the T. Nagar Indian Community Office in Chennai for public tributes!

நல்லகண்ணு
உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com