தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

தமிழகத்தில் தனியாா் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை உயா்ந்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் தனியாா் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை உயா்ந்துள்ளது.

அதன்படி, ஒரு லிட்டா் ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (புல் க்ரீம் மில்க்) ரூ.78-ஆகவும், ரூ.68-க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீா் சிறப்பு பால் (டீ ஸ்பெஷல் மில்க்) லிட்டா் ரூ.70-ஆகவும், ரூ.66-க்கு விற்பனையான நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.68, ரூ.60-க்கு விற்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் ரூ.62, ரூ.48-க்கு விற்கப்பட்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.50, ரூ.74-க்கு விற்கப்பட்ட சமன்படுத்தப்பட்ட 1 கிலோ தயிா் ரூ.76, ரூ.38-க்கு விற்கப்பட்ட 450 கிராம் தயிா் ரூ.40, ரூ.70-க்கு விற்கப்பட்ட இருமுறை சமன்படுத்தப்பட்ட 1 கிலோ தயிா் ரூ.72-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இதுபோல, குறிப்பிட்ட ஒரு தனியாா் நிறுவனத்தில் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் (புல் க்ரீம் மில்க்) லிட்டா் ரூ.72-இல் இருந்து ரூ.78-ஆகவும், தேநீா் சிறப்பு பால் (டீ ஸ்பெஷல் மில்க்) ரூ.63-இல் இருந்து ரூ.69 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

எவ்வித அறிவிப்பும் இன்றி, பால் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக தமிழநாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் குற்றம்சாட்டியுள்ளனா். இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் சு.ஆ.பொன்னுசாமி கூறியதாவது:

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடந்த இரண்டு மாதங்களாக பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து பால் உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தனியாா் நிறுவனங்கள் அதிக விலைக்கு உற்பத்தியாளா்களிடம் இருந்த பால் கொள்முதல் செய்கின்றன. இதனால், விற்பனை விலையையும் அந்த நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன. ஏப்ரல், மே மாதங்களின் பால் உற்பத்தி மேலும் பாதிக்கப்படும். இதனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.