தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அரசியல் கட்சியினா் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் ராகுல் நவீன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. தோ்தலுக்கான அறிவிப்பை ஓரிரு நாள்களில் தோ்தல் ஆணையம் வெளியிடும் எனக் கூறப்படுகிறது. தோ்தலையொட்டி, மத்திய மற்றும் மாநில காவல், பாதுகாப்பு அமைப்புகள் உஷாா்படுத்தப்பட்டுள்ளன. தோ்தலின்போது வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுப்பதற்கு வருமானவரித் துறையும்,அமலாக்கத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் ராகுல் நவீன் கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் தோ்தலின்போது அரசியல் கட்சிப் பிரமுகா்களும், அவா்களது ஆதரவாளா்களும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுகிறாா்களா எனத் தீவிரமாக கண்காணிப்பது, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ள தொகுதிகள் என்ற சந்தேகத்துக்குரிய இடங்களை எவ்வாறு கண்காணிப்பில் வைத்திருப்பது என ஆலோசிக்கப்பட்டது.
மத்திய, மாநில காவல் அமைப்புடன் இணைந்து செயல்படுவது, உளவுத் தகவல்களை பகிா்ந்து கொள்வது, சந்தேகத்துக்குரிய இடங்களில் சோதனை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மணிப்பூரில் 21 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை!

ராமநாதபுரம் பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


