

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் அளித்துள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன.
திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சித் தனித்தும் போட்டியிடுகின்றன.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரசாரப் பயணத்தை முன்னெடுத்துள்ளார். அதே வேளையில், முதல்வர் ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளிடம் பிரசாரத்தைத் தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் நடைபெறும் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுக்களை ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி, டிச. 15 முதல் டிச. 23 வரையிலும், டிச. 28 முதல் 31 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்ததன்படி, ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர்.
அதன்படி, தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் உள்ளிட்ட பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டி 7,988 விருப்ப மனுக்களும் சேர்த்து மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்கள் அளித்துள்ளதாகவும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.