புத்தாண்டு: தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்
Updated on
1 min read

புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கக்கூடிய இக்கோயில், தமிழர்களின் கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தற்போது தொடர் விடுமுறை என்பதாலும் - இன்று(ஜன. 1) புத்தாண்டு என்பதாலும் காலை முதலே அதிக அளவில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Summary

On the occasion of the New Year, thousands of devotees are visiting the Thanjavur Big Temple to offer prayers.

image-fallback
ஆங்கிலப் புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com