வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த பகுதி! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு...
மழை
மழைEPS
Updated on
1 min read

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வங்கக் கடலில் வருகின்ற ஜன. 6 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி 2-வது வாரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், இயல்பைவிட 3 சதவீதம் குறைவாகவே வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், லட்சத்தீவு - குமரிக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், இலங்கைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் நேற்றுமுதல் தமிழகம், புதுவையில் சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் ஜன. 6 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் வாய்ப்பு குறைவு என்றும், புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A low-pressure area is forming in the Bay of Bengal: Rain is likely in Tamil Nadu!

மழை
தங்கம் விலை அதிரடி உயர்வு! மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com