வைகோவுக்கு 82 வயதா? 28-ஆ என சந்தேகம் வருகிறது: முதல்வர் ஸ்டாலின்

வைகோவுக்கு 82 வயதா? அல்லது 28 வயதா என்ற சந்தேகம் வருகிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
MK Stalin | முதல்வர் மு.க. ஸ்டாலின்
MK Stalin | முதல்வர் மு.க. ஸ்டாலின்PTI
Updated on
1 min read

திருச்சி: மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு இப்போது 82 வயதா? அல்லது 28 வயதா என்று எனக்கு சந்தேகம் வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைப்பயணத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

விழாவில் பேசிய வைகோ, திராவிட இயக்கத்தின் முத்திரையாகப் பதிந்திருப்பவர் முதல்வர் ஸ்டாலின், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறப்போகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சாதி, மதத்தின் பெயரால் இங்கு கலவரம் உருவாக்க தில்லி ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் துடிக்கிறார்கள். சங்க காலத்தில் சாதிகள் கிடையாது. சாதிகள் அற்ற தமிழ் சமுதாயமாகவே இருந்தது. ஆனால் தற்போது மதத்தின் பெயரால் இங்கு மக்களுக்கு இடையே பிரிவினையை தூண்டப் பார்க்கிறார்கள். ஏகாதிபத்தியத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நடக்கும் சண்டைதான் சட்டப்பேரவைத் தேர்தல் என்று வைகோ கூறினார்.

தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், மதிமுக தலைவர் வைகோவின் நெஞ்சுரம், வேகத்தைப் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அவரது காலடி படாத இடமே இல்லை எனும் அளவுக்கு மக்கள் பிரச்னைக்காக நடைப்பயணம் செய்தவர் வைகோ. திராவிட பல்கலைக்கழகத்தில் படித்தவர் வைகோ. அதே பல்கலையில்தான் நானும் பயின்றேன். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு கல்வி உள்பட உரிமைகள் கிடைக்க போராடியவர் பெரியார். கருணாநிதியுடன் அருகில் இருந்து பாடங்களைக் கற்றவர் வைகோ. வைகோவின் சமத்துவ நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகள். முதுமையை முற்றிலும் தூக்கியெறிந்துவிட்டு நடைப்பயணம் மேற்கொள்கிறார் வைகோ என்று முதல்வர் கூறினார்.

வைகோ நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை அருகே உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைப்பயணத்தைத் தொடங்கிவைக்கவிருக்கிறார்.

முன்னதாக வைகோ உரையாற்றிய பிறகு, முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

திருச்சியில் இன்று தொடங்கும் வைகோவின் நடைப்பயணம் ஜன. 12ஆம் தேதி மதுரையில் நிறைவடைகிறது.

மத்திய அரசு சில மாநிலங்களில் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க சதி செய்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், திருத்தணியில் வடமாநில இளைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தில், போதைப்பொருள்களால் இளைய சமுதாயம் சீரழிந்து விடாமல் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மதிமுக பொதுச் செயலர் வைகோ சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

Summary

Tamil Nadu Chief Minister Stalin said that he is wondering whether Vaiko is 82 years old or 28 years old.

MK Stalin | முதல்வர் மு.க. ஸ்டாலின்
அன்பு செய்ய வேண்டிய ஆன்மிகத்தை வைத்து வம்பு செய்யும் கும்பல்: திருச்சியில் ஸ்டாலின் பேச்சு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com