வேலு நாச்சியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விஜய்.
வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விஜய்.
Updated on
1 min read

வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்!

எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விஜய்.
வெனிசுவேலா அதிபரை சிறைப்பிடித்த அமெரிக்கா! டிரம்ப் அறிவிப்பு

ராணி வேலு நாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் 1730ஆம் ஆண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Summary

TVK chief Vijay paid tribute to the brave Queen Velu Nachiyar on her birth anniversary at the TVK office in Panaiyur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com