வெனிசுவேலா அதிபரை சிறைப்பிடித்த அமெரிக்கா! டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
US sanctions Maduro's nephews, six Venezuelan oil shipping firms a day after oil tanker seizure
US sanctions Maduro's nephews, six Venezuelan oil shipping firms a day after oil tanker seizure
Updated on
1 min read

வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தியதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தநிலையில், வெனிசுவேலா மீது அமெரிக்க படை தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

போதைப் பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில மாதங்களாக வெனிசுவேலா அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து வெனிசுவேலா செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியதுடன், மதுரோ கடுமையாக விளையாடினால், அதுதான் கடைசி விளையாட்டாக இருக்கும் என்று கிறிஸ்துமஸ் தினத்தன்று டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

US sanctions Maduro's nephews, six Venezuelan oil shipping firms a day after oil tanker seizure
ஈரானில் மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை! உயிர்ப் பலிகள் 10 ஆக அதிகரிப்பு!
Summary

US President Trump says Venezuela President Nicolas Maduro captured after strikes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com