மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனிவிமானத்தில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.
பிறகு ஹெலிகாப்டா் மூலம் புதுக்கோட்டைக்குச் செல்லும் அவா், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகா் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
பிறகு சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவா், ஆட்சியா் அலுவலக சாலையில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதியில் கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். அங்கு இரவு தங்குகிறாா். தொடர்ந்து திங்கள்கிழமை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு செல்லும் அவர் சுவாமி தரிசனம் செய்கிறாா்.
பின்னா், மன்னாா்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழா’வில் பங்கேற்கிறாா். இதையடுத்து பகல் 1.20 மணிக்கு காா் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து புதுதில்லி புறப்பட்டுச் செல்கிறாா்.
Summary
Union Home Minister Amit Shah visited Trichy on Sunday on a two-day visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









