மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளின்படி கூட்டணி குறித்து முடிவு! - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி...
தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.கோப்புப் படம்
Updated on
1 min read

மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வருகிற ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டுப் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாநாட்டுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள், தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா,

"2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? என மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போட்டுள்ளனர். அவற்றை தனிப்பட்ட முறையில்நான் பிரித்து படிக்க இருக்கிறேன். அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணி குறித்து முடிவு செய்து வரும் 9 ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி இருக்கும்" என்று தெரிவித்தார்.

Summary

Alliance will be made based on district secretaries opinions: Premalatha Vijayakanth

தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
தமிழகத்தில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம்! காங்கிரஸ் நிர்வாகி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com