அமித் ஷா, கனிமொழி
அமித் ஷா, கனிமொழிANI

கனிமொழிக்கு அமித் ஷா பிறந்த நாள் வாழ்த்து!

கனிமொழிக்கு அமித் ஷா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
Published on

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, கனிமொழியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ளார்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, திமுகவைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவின் குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்று தெரிவித்த அமித் ஷா, ஹிந்துக்களின் நம்பிக்கையைத் திமுக சீர்குலைத்துள்ளது என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பேசியிருந்தார்.

Summary

Home Minister Amit Shah birthday wishes to DMK leader Kanimozhi

அமித் ஷா, கனிமொழி
தமிழகத்தில் அதிகாரப் பகிர்வை விவாதிக்க வேண்டிய நேரம்! காங்கிரஸ் நிர்வாகி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com