தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கூவம் ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை காலை போராட்டம் நடத்தினர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
158-வது நாளாக இன்று போராட்டத்தை தொடர்ந்து வரும் தூய்மைப் பணியாளர்கள், இதுவரை ரிப்பன் மாளிகை, அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் உள்பட பல இடங்களில் போராடி கைதாகினர்.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இன்று காலை கூவம் ஆற்றில் இறங்கி நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளார்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை சென்னை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.