சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

சென்னை மாநகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்...
Sanitation workers arrested who who protest infornt of Chennai Corporation Commissioners house
தூய்மைப் பணியாளர்கள் கைது
Updated on
1 min read

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடா் போராட்டங்களில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவகம், ரிப்பன் மாளிகை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு இன்று(ஜன. 2) போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Sanitation workers arrested who who protest infornt of Chennai Corporation Commissioners house

Sanitation workers arrested who who protest infornt of Chennai Corporation Commissioners house
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதல்வர் நாளை முக்கிய அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com