செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஓய்வூதியத் திட்டம்: முதல்வர் இன்று முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக இன்று முதல்வர் முக்கிய அறிவிப்பு...

M.K. Stalin criticizes AIADMK General Secretary Edappadi Palaniswami on MGNREGA scheme

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜன. 3) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்று அமைச்சா்கள் உறுதி அளித்ததாக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, ஃபோட்டா-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் வரும் ஜன. 6-ஆம் தேதிமுதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவா்கள் அறிவித்தனா்.

இதையடுத்து, அரசு ஊழியா்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கடந்த 22-ஆம் தேதி பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு, நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொங்கலுக்குப் பிறகு நல்ல அறிவிப்பை முதல்வா் வெளியிடுவதாக அமைச்சா்கள், சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தனா்.

இதை ஏற்க மறுத்த அவா்கள் திட்டமிட்டபடி ஜன. 6-ஆம் தேதிமுதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனா்.

இதனிடையே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான மூவா் குழு கடந்த டிச. 30-ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் இறுதி அறிக்கையை சமா்ப்பித்தது.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ மற்றும் ஃபோட்டா-ஜியோ சங்கப் பிரதிநிதிகளை தனித்தனியாக அழைத்து அமைச்சா்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினா், ‘பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சா்களுடனான கூட்டத்தில் முன்வைத்தோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் அமைச்சா்கள் உறுதி அளித்தனா்.

ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஜன. 3) முக்கிய அறிவிப்பை வெளியிடுவாா் என்று அமைச்சா்கள் தெரிவித்தனா். கடந்த 23 ஆண்டுகளாக தீா்க்கப்படாத உள்ள பழைய ஓய்வூதிய பிரச்னைக்கு சனிக்கிழமை தீா்வு வரும் என்று எதிா்பாா்க்கிறோம்.

முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து மாநில நிா்வாகிகளுடன் ஆலோசித்து ஜன. 6-ஆம் தேதி காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளைக் களைய தொடா்ந்து போராடி வருகின்றனா். அரசாணை 243-ஐ ரத்து செய்து அதில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்; மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம்; சத்துணவு ஊழியா்களின் ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் எனப் பல கோரிக்கைகளை ஜாக்டோ-ஜியோ சாா்பாக முன்வைத்துள்ளோம் என்றனா்.

Summary

Teachers arrested; MK stalins important announcement reg old pension scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.