

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கனிமொழியைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.