நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக..
நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

தமிழகத்தில் நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது.

இந்த நிலையில், இன்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நான்கு நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களை அவசர அவசரமாக வெளியேற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக நீதிமன்ற வளாகங்களில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Summary

Following bomb threats issued to four district courts in Tamil Nadu, a tense situation prevailed there.

நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜன.9, 10ல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com