

ஊழல் குற்றச்சாட்டு: திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை துறைவாரியாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வழங்கினார்.
மேலும், ஆளுநரிடம் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய இபிஎஸ், துறைவாரியான ஊழல் பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 64,000 கோடி
ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 60,000 கோடி
சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் ரூ. 60,000 கோடி
எரிசக்தித் துறையில் ரூ. 55,000 கோடி
டாஸ்மாக் துறையில் ரூ. 50,000 கோடி
பத்திரப் பதிவுத் துறை ரூ. 20,000 கோடி
நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 20,000 கோடி
நீர்வள ஆதாரத் துறையில் ரூ. 17,000 கோடி
சென்னை மாநகராட்சியில் ரூ. 10,000 கோடி
தொழில்துறையில் ரூ. 8,000 கோடி
பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 5,000 கோடி
மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 5,000 கோடி
வேளாண்மைத் துறையில் ரூ. 5,000 கோடி
சமூக நலன் துறையில் ரூ. 4,000 கோடி
உயர்க்கல்வித் துறையில் ரூ. 1,500 கோடி
இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 1,000 கோடி
ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 1,000 கோடி
சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில் ரூ. 750 கோடி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ரூ. 500 கோடி
சிறைத் துறையில் ரூ. 250 கோடி
பால்வளத் துறையில் ரூ. 250 கோடி
மொத்த ஊழல் ரூ. 4 லட்சம் கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.