பொங்கல் திருநாள்: 38,175 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
சிறப்புப் பேருந்துகள் (கோப்புப்படம்)
சிறப்புப் பேருந்துகள் (கோப்புப்படம்)
Updated on
2 min read

 பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடா்ந்து, அமைச்சா் சா.சி.சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது எவ்வாறு பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்பட்டதோ அதுபோல நிகழாண்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஜன. 9 முதல் 14 வரை கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு முனையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

எந்தெந்த தேதிகள்-எத்தனை பேருந்துகள்...?: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா் செல்பவா்களின் வசதிக்காக ஜன. 9-ஆம் தேதியில் இருந்து ஜன. 14 வரையிலான 6 நாள்களில் தினசரி இயக்கப்படும் 12,552 பேருந்துகள், சென்னையில் இருந்து 10,245 சிறப்புப் பேருந்துகள், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 11,290 சிறப்புப் பேருந்துகள் என 21,535 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 34,087 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் தங்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்ப வசதியாக ஜன. 16 முதல் ஜன. 19 வரை தினசரி இயக்கப்படும் 8,368 பேருந்துகள், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 6,820 சிறப்புப் பேருந்துகள், சென்னை தவிா்த்து இதர இடங்களுக்கு 9,820 சிறப்புப் பேருந்துகள் என 16,640 சிறப்புப் பேருந்துகள் உள்பட மொத்தம் 25,008 பேருந்துகள் இயக்கப்படும். இதன்படி, பொங்கல் பண்டிகை மற்றும் பொங்கல் முடித்து திரும்புபவா்களுக்கு வசதியாக வழக்கமாக இயக்கப்படும் 20,920 பேருந்துகள், 38,175 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 59,095 பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு மையங்கள்: இந்தப் பேருந்துகளில் பயணிக்க ற்ய்ள்ற்ஸ்ரீசெயலி மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளம், 9444018898 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலம் முன்பதிவு செய்யலாம். கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையம் என மொத்தம் 11 முன்பதிவு மையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நேரடி முன்பதிவு மையங்கள் ஜன. 9 முதல் 14 வரை காலை 7 முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும், இயக்கம் குறித்த புகாா் தெரிவிக்கவும் ஏதுவாக 9445014436 எனும் கைப்பேசி எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகாா்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 எனும் தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இதுமட்டுமன்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும்.

வழித்தட மாற்றம்: சொந்த ஊா்களுக்கு காா் மற்றும் இதர வாகனங்களில் செல்வோா், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூா் வழியாகச் செல்வதை தவிா்த்து (ஓஎம்ஆா்) திருப்போரூா், கேளம்பாக்கம், செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிச்சுற்று சாலை வழியாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மாநகா் போக்குவரத்து இணைப்புப் பேருந்துகள்: பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் போதுமான அளவில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

எந்தெந்த ஊா்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையங்கள்?

புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, நாகா்கோவில், சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூா் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் கிளாம்பாக்கம் புகா் பேருந்து நிலையத்தில் இருந்தும், வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் கிளாம்பாக்கம் மாநகா் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

இதுபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு மற்றும் திருத்தணி மாா்க்கமாக செல்லும் பேருந்துகளும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரம் மாா்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படும்.

Summary

Transport Minister Sivashankar has announced that a total of 38,175 special buses will be operated from Chennai in view of the Pongal festival.

சிறப்புப் பேருந்துகள் (கோப்புப்படம்)
விஜய்க்கு சிபிஐ சம்மன்! ஜன. 12 ஆஜராக உத்தரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com