

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜன. 6) காலை 11 மணிக்கு கூடுகிறது.
வரும் ஜன.20-ஆம் தேதி தமிழக பேரவைக் கூட்டத் தொடர் கூடவுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும்.
தமிழக அரசு தயாரித்து வழங்கும் இந்த உரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். மேலும், இந்தக் கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் முழுமையாக கிடைக்கும் வகையில் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், இது குறித்தும் விவாதிக்கப்படும்.
பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள், புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.