பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 8 அறிவிப்புகள்!

திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் பற்றி...

News image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :7 ஜனவரி 2026, 3:07 pm IST

திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவை,

1. முதலாவது அறிவிப்பு - திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

2. இரண்டாவது அறிவிப்பு - திண்டுக்கல் மாநகராட்சியில், இப்போது இருக்கும் பழைய பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

3. மூன்றாவது அறிவிப்பு - பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் புனித தீர்த்தங்களான இடும்பன்குளம் மற்றும் சண்முகா நதி 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

4. நான்காவது அறிவிப்பு - புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

5. ஐந்தாவது அறிவிப்பு - அதிக அளவில் முருங்கை பயிரிடப்படும் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் மார்க்கம்பட்டியில் உலகத் தரத்திலான முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

6. ஆறாவது அறிவிப்பு - கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த “சுற்றுலா முதலீட்டு பூங்கா” கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் சிப்காட் மூலமாக அமைக்கப்படும்.

7. ஏழாவது அறிவிப்பு - கண்வலிக் கிழங்கு உற்பத்தியில், நம்முடைய நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த பயிருக்கு நிலையான, நியாயமான விலை கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசுத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

8. எட்டாவது அறிவிப்பு – ஒட்டன்சத்திரம் நகராட்சியில், அதிகமான குடியிருப்புகள் உள்ள பகுதிகளில், 17 கோடி ரூபாய் செலவில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன தேவைகள் என்று பார்த்துப் பார்த்து செய்து கொடுக்கிறோம். இதனால் தமிழ்நாடு, வரலாறு காணாத வளர்ச்சியை இன்றைக்கு பெற்று வீரநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Summary

The 8 announcements made by the Chief Minister for Dindigul district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.